தைவான் அருகே சீன போர் ஒத்திகை; ஜப்பானை நெருங்கிய சீன ட்ரோன்கள் !!

  • Tamil Defense
  • August 7, 2022
  • Comments Off on தைவான் அருகே சீன போர் ஒத்திகை; ஜப்பானை நெருங்கிய சீன ட்ரோன்கள் !!

தைவானை சுற்றி வளைத்து சீன படைகள் போர் ஒத்திகை நடத்தி வந்த நிலையில் சில சீன ஆளில்லா விமானங்கள் ஜப்பானுக்கு மிகவும் நெருக்கமாக பறந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தைவானில் இருந்து 721 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜப்பானுடைய ஒகினாவா தீவிற்கு மிகவும் அருகே சீனாவின் ஆளில்லா விமானங்கள் பறந்துள்ளன, இங்கு அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளமான கடெனா விமானப்படை தளம் அமைந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஜப்பானிய விமானப்படை தன்னுடைய போர் விமானங்களை உடனடியாக அனுப்பியதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.