நேற்று சீன மக்கள் விடுதலை ராணுவ கடற்படையின் 6 போர் கப்பல்கள் மற்றும் சீன மக்கள் விடுதலை ராணுவ விமானப்படைக்கு சொந்தமான 24 போர் விமானங்கள் தைவான் நாட்டின் வான் பாதுகாப்பு அடையாள எல்லைக்குள் ஊடுருவி உள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ கடற்படையின் போர் கப்பல்கள் தைவான் நாட்டின் கடல் எல்லைக்குள் சுமார் 12 நாட்டிகல் மைல் உள்ளே வந்து போர் பயிற்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊடுருவல் நடவடிக்கைகளை அடுத்து தைவானுடைய ராணுவம் தனது போர் விமானங்கள், கடற்படை கப்பல்கள், வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் கடலோர பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் ஆகியவற்றை பயன்படுத்தி எதிர்வினை ஆற்றியதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.