ரஷ்யாவை எதிர்த்து முதல்முறையாக ஐ.நா வில் வாக்களித்த இந்தியா !!

  • Tamil Defense
  • August 26, 2022
  • Comments Off on ரஷ்யாவை எதிர்த்து முதல்முறையாக ஐ.நா வில் வாக்களித்த இந்தியா !!

உக்ரைன் தொடர்பான விவகாணத்தில் கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடைபெற்ற செயல்முறை வாக்கெடுப்பில் ரஷ்யாவை எதிர்த்து இந்தியா முதல்முறையாக வாக்களித்து உள்ளது.

கடந்த புதன்கிழமை உக்ரைன் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு உக்ரைன் போர் துவங்கி ஆறு மாதங்கள் ஆன நிலையில் அதனை குறித்த நிலவரத்தை ஆய்வு செய்யும் வகையில் 15 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூடியது.

அப்போது உக்ரைன் அதிபர் வேலோடிமிர் செலன்ஸ்கியை இந்த கூட்டத்தில் வீடியோ கான்ஃபன்சிங் மூலமாக பேசும்படி அழைத்தனர் அப்போது அதனை எதிர்க்கும் வகையில் ரஷ்ய பிரதிநிதி வசிலி நெபென்சியா செயல்முறை வாக்கெடுப்பு ஒன்றை நடத்த கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் சீனா கலந்து கொள்ளவில்லை, ரஷ்யா எதிர்த்து வாக்களித்தது, இந்தியா உட்பட மீதமுள்ள நாடுகள் அனைத்தும் ஆதரவாக ரஷ்யாவை எதிர்த்து வாக்களித்தன.

இது பற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய பிரதிநிதி வசிலி நெபென்சியா பேசும்போது ரஷ்யா உக்ரைன் அதிபர் கூட்டத்தில் கலந்து கொள்வதை எதிர்க்கவில்லை ஆனால் அவர் நேரில் வர வேண்டும் என்பது தங்களது நிலைப்பாடு என்றார்.