தைவானை சுற்றி போர் சீன போர் ஒத்திகை முக்கிய எல்லை அடையாள பகுதியில் அத்துமீறல் !!
1 min read

தைவானை சுற்றி போர் சீன போர் ஒத்திகை முக்கிய எல்லை அடையாள பகுதியில் அத்துமீறல் !!

சீனா ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகைகளை நடத்தி வரும் நிலையில் சீன படைகள் இருநாடுகளுக்கும் இடையேயான முக்கிய எல்லை பகுதியில் அத்துமீறி உள்ளன.

தைவானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சீன கடற்படை கப்பல்கள் மற்றும் சீன விமானப்படை விமானங்கள் இரு நாடுகளுக்கும் சரியாக நடுவே உள்ள கோட்டை Median Line தாண்டியதாகவும் இது சீண்டும் செயல் எனவும் கூறியுள்ளது.

முன்னர் இந்த கோடு இரு நாடுகளும் மதித்து வந்த முக்கியமான எல்லை கட்டுபாட்டு அடையாளமாக இருந்த நிலையில் தற்போது இந்த அத்துமீறல் நடைபெற்றுள்ளது அதனை தொடர்ந்து தைவானுடைய ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

சுமார் 49 சீன ராணுவ விமானங்கள் தைவானுடைய வான் பாதுகாப்பு அடையாள எல்லையை கடந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது, முன்னர் 68 விமானங்கள் அத்துமீறியதாக கூறப்பட்ட நிலையில் அதில் 19 விமானங்கள் மேற்கு பகுதியில் Median line அருகே பறந்ததாக தெரிய வந்துள்ளது.