நேபாளத்திற்கு 15 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவி அளிக்கும் சீனா !!

  • Tamil Defense
  • August 14, 2022
  • Comments Off on நேபாளத்திற்கு 15 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவி அளிக்கும் சீனா !!

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி நேபாள வெளியுறவு அமைச்சர் நாராயண் கட்கா ஆகியோர் சமீபத்தில் சந்தித்து பேசினர் இதனையடுத்து நேபாளத்திற்கு சுமார் 15 பில்லியன் யுவான் மதிப்பிலான நிதி உதவியை அறிவித்துள்ளது.

அதாவது 2022ஆம் ஆண்டிற்கான தேர்வு செய்யப்பட்ட திட்டங்களுக்காக சீனா மேற்குறிப்பிட்ட 15 பில்லியன் சீன யுவான் அளவிலான நிதி உதவியை அறிவித்துள்ளது மேலும் 3 மில்லியன் யுவான் மதிப்பிலான பேரிடர் மீட்பு பொருட்கள் மற்றும் 12 மில்லியன் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் ஆகியவற்றை நேபாளத்திற்கு சீனா அளிக்க உள்ளது.

தவிர கூடுதல் கொரோனா பெருந்தொற்று தடுப்பூசிகள் வழங்கவும் கல்வி, சுற்றுலா, மருத்துவம், வணிகம், உள்கட்டமைப்பு, விவசாயம், வறுமை ஒழிப்பு, கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றில் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளனர்.