பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பும் சீனா !!

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி சீன ராணுவத்தை சீனா அதிகமாக முதலீடு செய்துள்ள பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் பிராந்தியத்திற்கு அனுப்ப விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது சீனா தனது Belt Road திட்டத்திற்காக பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது மட்டுமின்றி அதன் மூலம் மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பெருக்கி கொள்ள விரும்புகிறது.

பாகிஸ்தானில் மட்டுமே சீனா சுமார் 60 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பணத்தை முதலீடு செய்துள்ளது தற்போது சீனா பாகிஸ்தானை பல்வேறு இடங்களில் தனது படைகளை நிறுத்தும் பொருட்டு முகாம்களை அமைக்கும்படி வற்புறுத்தி வருகிறது.

பாகிஸ்தானில் இந்த ராணுவ முகாம்களை அமைக்கும் பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெற்று வருவது மட்டுமின்றி இது பற்றி பாகிஸ்தானுக்கான சீன தூதர் நோங் ரோங் பாகிஸ்தான் பிரதமர் வெளியுறவு அமைச்சர் மற்றும் ராணுவ தளபதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

ஆஃப்கானிஸ்தானத்தை பொறுத்த வரையில் தலிபான்கள் இன்னும் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் முழு அளவிலான நெருக்கத்தை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.