கண்காணிப்பு கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை உடனடி சந்திப்பு நடத்த கோரும் சீனா !!

  • Tamil Defense
  • August 8, 2022
  • Comments Off on கண்காணிப்பு கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை உடனடி சந்திப்பு நடத்த கோரும் சீனா !!

சமீபத்தில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரவிருந்த சீன கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 க்கு இலங்கை அரசு தீடிரென அனுமதி மறுத்துள்ளது, இதற்கு இந்தியாவின் எதிர்ப்பு காரணம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள சீன தூதரகம் உடனடியாக இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் உடன் இது தொடர்பாக சந்திப்பு ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இது தொடர்பாக இலங்கை நாட்டிற்கான சீன தூதர்கி ஸென்ஹாங் உடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கண்காணிப்பு கப்பலால் இந்தியாவின் அனைத்து தென்னக மாநிலங்களையும் கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது இதனால் தான் இந்திய அரசு இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.