இலங்கை தலைநகர் நோக்கி செல்லும் சீன தயாரிப்பு பாகிஸ்தான் போர் கப்பல் !!

ஏற்கனவே சீனாவின் கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவிருந்த விவகாரம் இந்தியா சீனா இலங்கை இடையே முத்தரப்பு அரசியல் பிரச்சினையை கிளப்பிய நிலையில்

தற்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள துறைமுகம் நோக்கி பாகிஸ்தான் கடற்படையின் போர் கப்பல் ஒன்று செல்வதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ய இந்த கப்பல் தற்போது கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்பயை தளத்தை நோக்கி செல்கிறது வழியில் மலேசியாவில் நின்ற அந்த கப்பல் பின்னர் வங்கதேசம் செல்ல முயன்றது,

வங்கதேசத்தின் சத்தோகரம் துறைமுகத்தில் நின்று செல்ல நினைத்த நிலையில் வங்கதேச அரசு இந்தியாவுடன் தர்மசங்கடமான சூழல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாகிஸ்தான் கப்பல் வங்கதேசம் வர அனுமதி மறுத்துள்ளது.

இதனை தொடர்ந்து இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆகஸ்ட் 12 முதல் 15 வரையிலான நான்கு நாட்கள் நின்று செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கப்பல் PNS TAIMUR தைமூர் ஆகும், இது 4200 டன்கள் எடை கொண்ட சீனாவின் Type 054A/P ரக வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஃப்ரிகேட் போர் கப்பல் ஆகும், பாகிஸ்தான் கடற்படை இதனை துக்ரில் ரகம் Tughril Class என அழைக்கிறது.

இத்தகைய 4 கப்பல்களை பாகிஸ்தான் சீனாவிடம் ஆர்டர் செய்திருந்தது அதில் முதலாவதான PNS TUGHRIL துக்ரில் கடந்த ஆண்டு படையில் இணைந்த நிலையில் தற்போது இந்த இரண்டாவது கப்பல் படையில் இணைய உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.