சீனா இன்று தைவான் நாட்டின் கிழக்கு பகுதிக்கு மிகவும் அருகே ஐந்து நாள் ராணுவ ஒத்திகையின் ஒருபகுதியாக ஏவுகணைகளை ஏவியதாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் கிழக்கு கட்டளையகத்தின் செய்தி தொடர்பாளர் ஷீ யீ பேசும்போது ஏவுகணைகளை ஏவயிது மட்டுமின்றி வான் பாதுகாப்பு மற்றும் துல்லிய தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
நிபுணர்கள் கூறும்போது Dong Feng 15B ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் எனவும், தைவானுக்கு மிகவும் அருகே அவை விழுந்ததால் தைவானிய கடற்படை கப்பல்களை குறிவைப்பது போன்ற பயிற்சியாக இருக்கும் எனவும் நம்புகின்றனர்.
அதே நேரத்தில் தைவானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்களது கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை, தாக்குதல் திறன்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகிய அனைத்தையும் தயாராக வைத்து இருந்ததாகவும் சீனாவின் பொறுப்பற்ற செயலை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.