ரஷ்யாவை போன்றே சூப்பர் டார்பிடோக்களை உருவாக்க உள்ள சீனா !!
சீனா அணுசக்தியில் இயங்கும் Super Torpedo சூப்பர் நீரடிகணைகளை தயாரிக்க உள்ளது அதற்கான வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளது, இவை பல ட்ரோன்களை தாக்குதல் நடத்த ஏவ கூடியவை.
இந்த சூப்பர் நீரடிகணைகளை மிகப்பெரிய அளவில் தயாரிக்கவும் அவற்றை நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர் கப்பல்கள் ஆகியவற்றில் இருந்து ஏவி பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் POSEIDON அணுசக்தி அணு ஆயுத தாக்குதல் நீரடிகணையானது அணு ஆயுதத்தை சுமந்து கொண்டு நீர்மூழ்கி கப்பல்கள் கூட பயணிக்க முடியாத ஆழத்தில் உலகின் எந்த முலைக்கும் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவையாகும் இவற்றில் உள்ள அணு ஆயுதம் ஹிரோஷிமா நாகசாகியில் போடப்பட்டதை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தவை என கூறப்படுகிறது.
ஆனால் சீனாவினுடையது இந்தளவுக்கு பெரியது இல்லை மாறாக ஒரு வழக்கமான நீரடிகணையை போல் தான் இருக்கும் ஆனால் அணுசக்தியால் இயங்கும் அதில் அணு ஆயுதம் ஏதும் இருக்காது.
இதனை சீனா உருவாக்குவதற்கு காரணம் இவற்றை கண்டுபிடிக்க முடியாது ஆகவே எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என்பது தான், இதனை சீனா படையில் இணைத்தால் சீன கடற்படை ஒட்டுமொத்த இந்தோ பசிஃபிக் பிராந்தியத்திற்கும் மிகப்பெரிய சவாலாக மாறி விடும் என்றால் மிகையல்ல.
இந்த சூப்பர் நீரடிகணைகளை தயாரிக்க உள்ளதாக சீனாவின் மிகப்பெரிய கடற்படை கட்டுமான நிறுவனமான China Shipbuilding Industry Corporation சீனா கப்பல் கட்டுமான தொழிற்சாலை நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.