தைவானை சுற்றி 39 சீன போர் விமானங்கள் மற்றும் 13 போர் கப்பல்கள் !!
1 min read

தைவானை சுற்றி 39 சீன போர் விமானங்கள் மற்றும் 13 போர் கப்பல்கள் !!

திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் தைவானை சுற்றி 13 சீன போர் கப்பல்கள் மற்றும் 39 போர் விமானங்கள் இருந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

39 வானூர்திகளில் 21 தைவான் நாட்டின் ADIZ வான் பாதுகாப்பு அடையாள பகுதியை தாண்டியதாகவும், எட்டு சுகோய்-30 (Su-30) மற்றும் பதினாறு ஜே-11 (J-11) 14 விமானங்கள் இரு நாடுகளுக்கும் நடுவே உள்ள Median line எல்லையை கடந்ததாகவும்

நான்கு ஜே-16 (J-11), இரண்டு ஜே.ஹெச்-7 (JH-7) குண்டுவீச்சு போர் விமானங்கள் மற்றும் ஒரு கா-28 (Kamov-28) நீர்மூழ்கி வேட்டை ஹெலிகாப்டர் ஆகியவை தைவானுடைய வான் பாதுகாப்பு அடையாள பகுதியின் தென் மேற்கு பகுதியில் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து தைவானுடைய விமானப்படை போர் விமானங்களை அனுப்பியும், வான் பாதுகாப்பு அமைப்புகளை தயார்படுத்தியும் ரேடியோ மூலமாக எச்சரிக்கை விடுத்தும் தைவான் நடவடிக்கை எடுத்துள்ளது.