சீனா இன்றும் நாளையும் அதாவது ஆகஸ்ட் 26,27 ஆகிய நாட்களில் தைவான் ஜலசந்தியில் மீண்டும் போர் பயிற்சிகளை அறிவித்துள்ளது.
இந்த போர் பயிற்சிகள் சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்தின் கடலோர பகுதிகளில் அமைந்துள்ள ஃபியூகியாங் மற்றும் பூடிங் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளன.
இந்த பயிற்சிகளின் போது உண்மையான ஆயுதங்களை சீன படைகள் பயன்படுத்தும் எனவும் ஆகவே போர் பயிற்சிகள் நடைபெறும் இடத்தில் கப்பல்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சீன கடல்சார் பாதுகாப்பு முகமை அறிவிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு தைவானை சேர்ந்த அரசியல் கட்சியான குவாமின்டாங் கட்சி Kuomintang Party KMTன் தலைவர் ஆண்ட்ரூ ஹ்சியா சீனா சென்று ARATS எனும் தைவான் ஜலசந்தி தாண்டிய உறவுகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் ஸாங் ஸிஜூனை பிரச்சினைகளை தீர்க்க சந்தித்த அடுத்த இரண்டு நாட்களில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.