சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயரை சூட்ட திட்டம் !!

பஞ்சாப் மாநில அரசும் ஹரியானா மாநில அரசும் சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பெயரை சூட்ட ஒருமனதாக முடிவு செய்துள்ளன.

இதனை பஞ்சாப் மாநில அரசு முதல் அமைச்சர் பக்வந்த் மான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார், இது குறித்து ஹரியானா மாநில துணை முதல் அமைச்சர் துஷ்யந்த் சவுதாலா உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது பற்றி ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் துபே பேசும்போது பகத்சிங் நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிப்பவர் என்றும் இரு மாநில அரசுகளின் இந்த முடிவை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்