அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தவர்களை அசாமில் கைது செய்த BSF !!

  • Tamil Defense
  • August 28, 2022
  • Comments Off on அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தவர்களை அசாமில் கைது செய்த BSF !!

அசாம் மாநிலத்தின் தெற்கு சல்மார் மங்காச்சார் மாவட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஐந்து பேரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து வங்கதேச குடிமக்களையும் பின்னர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நல்லெண்ண அடிப்படையில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி இதே மாவட்டத்தில் சர்வதேச எல்லையை கடந்து இந்தியாவுக்குள்ள நுழைந்த அப்துல் ஹாய் மற்றும் நிரஞ்சன் கோஷ் ஆகிய இருவரையும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்து அசாம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையொட்டி அவர்கள் இருவரையும் காவல்துறையினர் மாவட்ட முதன்மை நீதிபதி முன்னர் ஆஜர்படுத்திய போது அவர்களுக்கு 5 வருட சிறை மற்றும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.