பாகிஸ்தானில் இருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லும் இங்கிலாந்து விமானப்படை ??

  • Tamil Defense
  • August 18, 2022
  • Comments Off on பாகிஸ்தானில் இருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லும் இங்கிலாந்து விமானப்படை ??

இங்கிலாந்து விமானப்படை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பாகிஸ்தானில் இருந்து உக்ரைன் அருகேயுள்ள நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை ஏற்றி செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது “ZZ173” எனும் அடையாள எண் கொண்ட இங்கிலாந்து விமானப்படையின் C-17 Globemaster 3 ரக விமானம் அதில் அடக்கம் எனவும் பாகிஸ்தான் விமானப்படையின் நூர் கான் தளத்தில் இருந்து புறப்பட்டதாகவும் தெரிகிறது.

ஆனால் இங்கிலாந்து விமானப்படை விமானங்கள் உண்மையிலேயே ஆயுதங்களை கொண்டு செல்ல தான் பாகிஸ்தான் சென்றனவா அப்படி இல்லையெனில் எதற்காக அவை பாகிஸ்தான் சென்றன என்பது போன்ற கேள்விகள் உள்ளன.