Breaking News

அமெரிக்க HARPOON ஏவுகணையை விடவும் பிரபலமாகும் Brahmos ஏவுகணை !!

  • Tamil Defense
  • August 3, 2022
  • Comments Off on அமெரிக்க HARPOON ஏவுகணையை விடவும் பிரபலமாகும் Brahmos ஏவுகணை !!

இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான Brahmos ஏவுகணை தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு அல்லது வளைகுடா நாடுகளில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.

விரைவில் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து மூன்று முதல் நான்கு நாடுகள் வரை பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அதூல் ராணே கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும் போது தென்கிழக்கு ஆசியாவில் வியட்னாம், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளும் மத்திய கிழக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஒமன் ஆகியவை ஆர்வம் காட்டி உள்ளதாகவும் கூறினார்.

ஃபிலிப்பைன்ஸ் சமீபத்தில் இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்கிய நிலையில் அடுத்தபடியாக இந்தோனேசியாவுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டில் அனேகமாக ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தோனேசியாவின் கடற்படை கப்பல்களில் பிரம்மாஸ் ஏவுகணைகளை பொருத்துவதற்கான வாய்ப்புகளை கண்டறிய இந்திய குழுவினர் அந்நாட்டில் உள்ள சுரபயா கப்பல் கட்டுமான தளத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட இரண்டு பிராந்தியங்களிலுமே அமெரிக்காவின் HARPOON ஏவுகணைகள் பிரபலமாக இருந்த நிலையில் தற்போது இந்தியாவின் Brahmos ஏவுகணைகள் அந்த இடத்திற்கு மெதுவாக நகர்ந்து வருகின்றன.

இதற்கு காரணம் HARPOON ஏவுகணைகளின் சப்சானிக் வேகம் தான், Brahmos ஏவுகணைகள் சூப்பர்சானிக் வேகத்தில் பயணிப்பவை ஆகும், அவற்றை இடைமறித்து அழிப்பதும் மிக கடினம் இதனால் தான் பிரம்மாஸ் ஏவுகணைகள் பிரபலமடைந்து வருவதாக கூறப்படுகிறது.