தேஜாஸ் விமானத்தை சோதனை செய்ய வரும் ஆஸ்திரேலிய விமானப்படை குழு !!

  • Tamil Defense
  • August 10, 2022
  • Comments Off on தேஜாஸ் விமானத்தை சோதனை செய்ய வரும் ஆஸ்திரேலிய விமானப்படை குழு !!

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முன்னனி பயிற்சி போர் விமானம் (LIFT-Lead In Fighter Trainer) வாங்க RFI எனப்படும் தகவல் அறிவிக்கை கோரிக்கையை ஆஸ்திரேலிய விமானப்படை வெளியிட்டது.

ஏற்கனவே படையில் உள்ள 33 BAE Hawk-127 பயிற்சி போர் விமானங்களை 2031 முதல் மாற்றி புதிய பயிற்சி விமானங்களை வாங்க இந்த தகவல் அறிவிக்கை ஆஸ்திரேலிய விமானப்படையால் சர்வதேச அளவில் கோரப்பட்டது.

இதனை தொடர்ந்து Boeing நிறுவனம் தனது T-7A Redhawk, KAI நிறுவனம் தனது T-50, Lockheed Martin தனது T-50A, Leonardo நிறுவனம் தனது M-346 Master ஆகிய விமானங்களை அளிக்க முன்வந்தன.

அந்த வரிசையில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் HAL தனது LCA Tejas LIFT ரக விமானத்தை அளிக்க முன்வந்தது தற்போது ஆஸ்திரேலிய விமானப்படை தேஜாஸை சோதனை செய்ய உள்ளது.

தேஜாஸ் Tejas LIFT அல்லது HLFT-42 என்ற மேற்குறிப்பிட்ட விமானத்தை G2G Government to Government அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு விற்பனை செய்ய முன்வந்தது குறிப்பிடத்தக்கது.