அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து AUKUS என்ற முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தம் மூலமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளும் ஆஸ்திரேலிய கடற்படைக்கு அணுசக்தியில் இயங்கும் 8 தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான தொழில்நுட்ப உதவிகளை செய்யும்.
தற்போது இந்த முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு இந்தோனேசியா மிகவும் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது அதாவது இந்த ஒப்பந்தம் பேரழிவு ஆயுதங்கள் பெருக்கத்திற்கு வித்திடும் என கூறியுள்ளது.
அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் அணு ஆயுதங்கள் பரவல் தடை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்பவும் இந்தோனேசியா முடிவு செய்துள்ளது, மலேசியாவும் இந்த முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் முக்கிய குற்றச்சாட்டு இந்த ஒப்பந்தம் பேரழிவு ஆயுத போட்டியை ஊக்குவிக்கும் என்பது மட்டுமின்றி நீர்மூழ்கிகளுக்கான எரிபொருள் யூரேனியத்தை ஆஸ்திரேலியா பயன்படுத்தி அணு ஆயுதங்களை உருவாக்கலாம் என்பதையும் முன்வைத்து எதிர்த்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் சுமார் 120 நாடுகளின் ஆதரவை பெற்று இந்தோனேசியா இந்த ஒப்பந்தத்தை தடுக்கு முயற்சி செய்து வருகிறது அதே நேரத்தில் அமெரிக்காவை சேர்ந்த அணு ஆயுத பரவல் தடுப்பு செயல்பாட்டாளர்கள் அதிபர் பைடனுக்கு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய கடிதம் எழுதியுள்ளதும் கூடுதல் தகவல் ஆகும்.