அருணாச்சல பிரதேசத்தில் அசாம் ரைஃபிள்ஸ் வீரர்கள் மீது மியான்மரில் இருந்து துப்பாக்கி சூடு !!

  • Tamil Defense
  • August 10, 2022
  • Comments Off on அருணாச்சல பிரதேசத்தில் அசாம் ரைஃபிள்ஸ் வீரர்கள் மீது மியான்மரில் இருந்து துப்பாக்கி சூடு !!

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் திராப் மற்றும் சங்லாங் ஆகிய மாவட்டங்களில் அசாம் ரைஃபிள்ஸ் படை வீரர்கள் மீது மியான்மரில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

அதாவது மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களில் படை வீரர்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரோந்து சென்ற போது எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பயங்கரவாதிகளின் இந்த துப்பாக்கி சூட்டில் அசாம் ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த ஒரு இடைநிலை அந்தஸ்திலான அதிகாரி JCO- Junior Commissioned Officer காயம் அடைந்துள்ளார்.