இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் இந்தியாவின் கடைசி கிராமம் !!
1 min read

இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் இந்தியாவின் கடைசி கிராமம் !!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள காஹோ கிராமம் சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோட்டுக்கு மிகவும் அருகே அமைந்துள்ள இந்தியாவின் கடைசி கிராமம் ஆகும்.

இங்கு மொத்தமாகவே 79 பேர் தான் வசிக்கிறார்கள் இங்கு 16 வீடுகள் தான் உள்ளன, கடுமையான நிலப்பரப்பில் உள்ளதால் போக்குவரத்து தகவல்தொடர்பு மருத்துவம் சார்ந்த பிரச்சினைகள் பல இங்கு நிலவுகிறது ஆனால் இந்திய ராணுவம் இவர்களுக்கு உதவி வருகிறது.

அதுபற்றி அந்த கிராம மக்கள் கூறும்போது இந்திய ராணுவத்தினர் மருந்துகள், உணவு பொருட்கள், கட்டுமான உதவிகள், சுற்றுலா மேம்பாட்டு உதவிகள் ஆகியவற்றை அளிப்பதாகவும் இதன் காரணமாக தங்கள் வாழக்கை தரம் உயர்ந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

மேலும் இந்திய ராணுவத்தினர் இந்த கிராமத்தில் தங்கி இருப்பதாகவும் சீனாவின் அச்சுறுத்தல் இருந்தாலும் தங்களுக்கு பயமில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர் இந்த கிராமத்தை மேம்படுத்த இந்திய தரைப்படை உதவி வருவதும் இதன் மூலம் இந்த கிராமம் முன்மாதிரி கிராமமாக அறிவிக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.