பிஹாரில் கொள்ளையர்களை எதிர்த்த ராணுவ வீரர் மீது துப்பாக்கி சூடு !!

புதன்கிழமை இரவு அன்று பிஹார் தலைநகர் பாட்நாவில் கொள்ளை முயற்சியை எதிர்த்த பபுல் குமார் என்ற ராணுவ வீரர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.இதில் அவர் உயிரிழந்துள்ளார்.

பபுல் குமார் புதன்கிழமை இரவு தனது கிராமமான ரகோபுர் சந்த்புராவில் இருந்து இருசக்கர வாகனம் மூலமாக பாடலிபுத்திரா ரயில்வே நிலையம் செல்லும் போது கன்கர்பாக் பகுதியில் கொள்ளையர்கள் அவரை மறித்தனர்.

அவரிடம் அவர்கள் கொள்ளையடிக்க முயற்சித்த போது அதனை பபுல் குமார் எதிர்க்கவே ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.