தைவான் ஜலசந்தியில் அமெரிக்க போர் கப்பல்கள்; கண்காணித்த சீன கடற்படை !!
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி தைவான் சென்றதற்கு பிறகு அதற்கு சீனா கடுமையான தெரிவித்த கையோடு தைவான் சுற்றி வளைத்து விமானப்படை கடற்படை மற்றும் சீனாவில் இருந்து ராக்கெட்டுகளை ஏவி போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இவ்வளவு பதட்டத்திற்கு இடையே அமெரிக்க கடற்படையின் போர் கப்பல்கள் சீனாவையும் தைவானையும் பிரக்கும் தைவான் ஜலசந்தியில் பயணம் மேற்கொண்டுள்ளன, இந்த கப்பல்களை சீன கடற்படை சற்றே தொலைவில் இருந்து கண்காணித்துள்ளது.
கடந்த 28ஆம் தேதி அதாவது நேற்று அமெரிக்க கடற்படையின் இரண்டு ஏவுகணை தாக்குதல் க்ருசர் ரக கப்பல்களான USS ANTIETAM மற்றும் USS CHANCELLORSVILLE ஆகிய இரண்டு கப்பல்ளும் தைவான் ஜலசந்தியில் பயணித்ததை உள்நோக்கத்தோடு விளம்பரம் செய்திருப்பதாக சீனாவின் கிழக்கு ராணுவ கட்டளையகம் குற்றச்சாட்டி உள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் இதுவரை விமானந்தாங்கி கப்பல்கள் உட்பட சுமார் 100 அமெரிக்க கடற்படை கப்பல்கள் தைவான் ஜலசந்தியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.