அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரின் விமானத்தை சுட்டு வீழ்த்துலாம் மூத்த சீன அதிகாரி மிரட்டல் !!
1 min read

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரின் விமானத்தை சுட்டு வீழ்த்துலாம் மூத்த சீன அதிகாரி மிரட்டல் !!

அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோஸி ஆசியாவில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுபயணமாக செல்கிறார் அந்த வகையில் தைவான் நாட்டிற்கும் செல்ல உள்ளார்.

இதனையடுத்து சீன அரசின் மூத்த அதிகாரியும், சீன அரசு ஆதரவு ஊடகமான Global Timesல் முன்னர் பணிபுரிந்தவருமான ஹூ ஷீஜின் நான்சி பெலோஸி தைவான் சென்றால் அவரது விமானத்தை சீன விமானப்படை சுட்டு வீழ்த்தலாம் என சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்படி ஒரு புறம் மறைமுகமாக மிரட்டல் விடுத்த அதே நேரத்தில் சீன அரசும் நேரடியாக அதிகாரப்பூர்வமாக நான்சி பெலோஸி தைவான் சென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் காணொளி மூலமாக பேச்சுவார்த்தை நடத்திய போதும் ஸி ஜின்பிங் அமெரிக்க அதிபர் பைடனிடம் நெருப்புடன் விளையாட வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பெண்டகன் அதிகாரிகள் நான்சி பெலோஸி தைவான் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.