சீரமைப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க போர்கப்பல் புதிய வரலாறு !!

  • Tamil Defense
  • August 8, 2022
  • Comments Off on சீரமைப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க போர்கப்பல் புதிய வரலாறு !!

இந்திய வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் ஒன்று சீரமைப்பு பணிகளுக்காக இந்தியா வந்து உள்ளது.

USNS Charles Drew எனும் 23,000 டன்கள் எடை கொண்ட அமெரிக்க கடற்படையின் டேங்கர் மற்றும் சரக்கு சப்ளை கப்பல் சென்னையில் உள்ள காட்டுபள்ளி Larsen & Toubro லார்சன் அன்ட் டூப்ரோ கப்பல் கட்டுமான தளத்திற்கு வந்துள்ளது.

இந்த கப்பல் ஆகஸ்ட் 7 முதல் வருகிற 17ஆம் தேதி வரை அதாவது பத்து நாட்கள் இங்கே இருக்கும் இந்த பத்து நாட்களுக்கு உள்ளாக இந்த கப்பலின் அனைத்து சீரமைப்பு பணிகளும் முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் திட்டங்களுக்கு வலுசேர்ப்பது மட்டுமின்றி இந்திய அமெரிக்க இருதரப்பு உறவுகளிலும் புதிய மைல்கல் என இந்த நிகழ்வை குறிப்பிட்டுள்ளது.

அதே போல் தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியான ரியர் அட்மிரல் மைக்கேல் பேக்கர் பாதுகாப்பான அமைதியான இந்தோ பசிஃபிக் பிராந்தியத்திற்கு வித்திடும் வகையில் இந்த பிராந்தியத்திலேயே இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.