அமெரிக்க சபாநாயகரை தொடர்ந்து தைவானுக்கு செல்லும் அமெரிக்க எம்.பிக்கள் !!

  • Tamil Defense
  • August 16, 2022
  • Comments Off on அமெரிக்க சபாநாயகரை தொடர்ந்து தைவானுக்கு செல்லும் அமெரிக்க எம்.பிக்கள் !!

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோஸி தைவான் சென்று திரும்பிய 12 நாட்கள் கழித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தைவான் சென்றடைந்து உள்ளனர்

எட் மார்கி, ஜாண் காராமண்டி, ஆலன் லோவென்தால்,டான் பேயர், அவ்முவா அவாத்தா ஆகிய 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் தைவான் சென்றுள்ளனர் இவர்கள் அனைவரும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தைவானில் இவர்கள் ஐவரையும் தைவான் வெளியுறவு துறை இணை அமைச்சர் அலெக்சாண்டர் தா ரெய் யூய் வரவேற்றார் மேலும் தங்களுக்கு அளவு கடந்த தன்னலமற்ற ஆதரவு அளிக்கும் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

இவர்களின் பயணம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தைவானுடைய சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை என கூறிய பிறகும் அமெரிக்க சபாநாயகரின் பயணத்தை அடுத்து சீனா போர் ஒத்திகைகள் மூலமாக ஏற்படுத்தியுள்ள பதட்டத்திற்கு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.