இந்தியாவின் சொந்த விமானந்தாங்கி கப்பலில் பயன்படுத்தப்பட உள்ள அமெரிக்க என்ஜின் ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • August 20, 2022
  • Comments Off on இந்தியாவின் சொந்த விமானந்தாங்கி கப்பலில் பயன்படுத்தப்பட உள்ள அமெரிக்க என்ஜின் ஒரு பார்வை !!

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வரலாற்று சாதனை என்றால் மிகையல்ல காரணம் உலகில் வெகுசில நாடுகள் மட்டுமே இத்தகைய கப்பல்களை சொந்தமாக வடிவமைத்து தயாரிக்கும் திறன் கொண்டவை ஆகும்.

2007ஆம் ஆண்டு கட்ட துவங்கப்பட்ட விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் உள்ள 76 சதவிகித பாகங்கள் உள்நாட்டு தயாரிப்பாகும் மீதமுள்ள 24 சதவிகித பாகங்கள் வெளிநாட்டு தயாரிப்பாகும் அந்த வகையில் இந்த கப்பலில் பயன்படுத்தப்படும் என்ஜின் அமெரிக்க தயாரிப்பாகும்.

அமெரிக்காவின் General Electrics நிறுவனத்தின் கடல்சார் என்ஜின் தயாரிப்பு நிறுவனமான GE Marine தயாரித்த LM2500 ரக கடல்சார் என்ஜின்களை இந்தியாவில் Hindustan Aeronautics Limited நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அதாவது அமெரிக்காவின் ஒஹாயோ மாநில லத்தில் உள்ள இவன்டேல் நகரில் உள்ள GE Marine நிறுவனத்துடைய தொழிற்சாலையில் என்ஜினுடைய பாகங்கள் தயாரிக்கப்பட்ட இந்தியா அனுப்பக வைக்கப்பட்டன.

இங்கு பெங்களூர் நகரில் HAL நிறுவனத்தின் தொழில்துறை மற்றும் கடல்சார் என்ஜின்கள் தயாரிப்பு பிரிவு அந்த பாகங்களை ஒன்றாக இணைத்து (அஸெம்பிள் ) செய்து முழு என்ஜினாக மாற்றி சோதனை செய்து இந்திய கடற்படையிடம் வழங்கியது.

இப்படி இரண்டு நிறுவனங்களும் கடந்த 30 ஆண்டுகளாக இப்படி கூட்டாக செயல்பட்டு வருகின்றன என்பதும் தற்போது இந்திய கடற்படை 18 GE நிறுவன என்ஜின்களை பயன்படுத்தி வருவதும் கட்டுமானத்தில் உள்ள P-17A ரக நீர்மூழ்கி கப்பல்களிலும் இந்த என்ஜின்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LM2500 என்ஜின் ஏற்கனவே இந்தியா உட்பட 39 நாடுகளின் கடற்படையால் பயன்படுத்தி வரப்படுகிறது, உலகம் முழுவதும் 633 கப்பல்களில் GE என்ஜின்கள் பயன்படுத்தி வரப்படுகின்றன அதிலும் அமெரிக்க கடற்படையின் 95 சதவிகித என்ஜின்கள் GE நிறுவனத்தின் தயாரிப்புகள் என்பது கூடுதல் தகவல் ஆகும்.