உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவுக்கு அருகோ முதல்முறையாக அமெரிக்க விமானப்படை முன்னனி படை குவிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு உள்ளது.
அமெரிக்க விமானப்படையின் 90ஆவது போர் விமான படையணியை சேர்ந்த F-22 Raptor ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் போலந்தில் உள்ள 32ஆவது விமானப்படை தளத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யபடையெடுப்புக்கு பிறகு ஐரோப்பாவிற்கு அமெரிக்க விமானப்படையின் F-22 Raptor விமானங்கள் அனுப்பி வைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
ஐரோப்பிய அமெரிக்க விமானப்படை அறிக்கையின்படி ஆறு F-22 போர் விமானங்கள் ஏற்கனவே போலந்து சென்றடைந்து உள்ளதாகவும் விரைவில் மீதமுள்ளவையும் செல்லும் என கூறப்படுகிறது.
இந்த F-22 போர் விமானங்கள் நேட்டோவின் கிழக்கு எல்லைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட உள்ளன மட்டுமின்றி இவை ரஷ்யாவை தாக்கும் தொலைவில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இங்கு அமெரிக்க விமானப்படையின் 158ஆவது போர் விமான படையணியை சேர்ந்த F-35 போர் விமானங்கள் இருந்த நிலையில் அவற்றிற்கு பதிலாக தற்போது இந்த விமானங்கள் வந்துள்ளன.
அதாவது நேட்டோவின் கிழக்கு எல்லைகளை பாதுகாக்கும் பணியில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விமானப்படை அணிகள் மாறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.