அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா !!
1 min read

அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா !!

செவ்வாய்கிழமை அன்று அமெரிக்க விமானப்படை Minuteman-3 ரக அணு ஆயுத ஏவுகணை ஒன்றை வான்டன்பர்க் விண்வெளி படை தளத்தில் இருந்து ஏவி சோதனை செய்ததாக அறிவித்துள்ளது.

இந்த சோதனை எந்த நாட்டிற்கும் செய்தி அனுப்பும் நோக்கத்தில் நடத்தப்படவில்லை எனவும் ஏற்கனவே நடத்தப்பட வேண்டிய நிலையில் தைவான் விவகாரம் காரணமாக பிரச்சினையை அதிகரிக்க வேண்டாம் என்ற நோக்கில் காலம் தாழ்த்தி தற்போது நடத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

567ஆவது சோதனை படையணியின் கட்டளை அதிகாரி கர்னல் க்றிஸ் க்ரூஸ் பேசுகையில் அமெரிக்க அணு ஆயுத படைகளின் தயார்நிலை மற்றும் அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதல் திறன் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,

அமெரிக்க அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் அதனுடைய நட்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பதாகவும் இந்த சோதனை அமெரிக்க படைகளின் திறன்களை நிருபிக்கும் விதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Boeing நிறுவனம் தயாரித்த Minuteman 3 கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையானது அமெரிக்க அணு ஆயுத படையில் மிகவும் முக்கியமானது, இது சுமார் 9600 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லும் மேலும் மணிக்கு 24,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஆற்றலை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.