ஒரே சீனா கொள்கையில் அமெரிக்கா உறுதியாக உள்ளது; தைவானின் சுதந்திரத்தை அங்கீகரிக்கவில்லை அமெரிக்கா !!

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் சமீபத்தில் பேசும்போது அமெரிக்கா ஒரே சீனா கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும் தைவானுடைய சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை எனவும் சீனா தைவான் இடையேயான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட வேண்டிய ஒன்று என கூறினார்.

அதை போலவே சீனா அல்லது தைவான் ஆகிய இரு நாடுகளும் இந்த விவகாரத்தில் தனிச்சையாக எந்த வித முடிவையும் எடுக்கக்கூடாது எனவும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை அமைதியான முறையில் தீர்த்து கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் பேசினார்.

சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி இதே போன்ற கருத்தை தெரிவித்திருந்த நிலையில் அது சர்ச்சைக்குள்ளான போது அவரது தனி செயலாளர் நான்சி பெலோஸி அவர்கள் தவறுதலாக கூறி விட்டதாக விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.