இந்திய கடற்படைக்கு அமெரிக்கா அளிக்க உள்ள F-18 விமானத்துடன் 2 அதிநவீன ஏவுகணைகள் ஆஃபர் !!

இந்திய கடற்படைக்கு அமெரிக்கா போயிங் நிறுவனம் BOEING நிறுவனம் தயாரிக்கும் F/A-18 Super Hornet பல திறன் போர் விமானத்தை ஆஃபர் செய்து அதன் சோதனைகள் கோவாவில் நடைபெற்றது.

இந்த நிலையில் அந்த போர் விமானம் தேர்வாக அதிக வாய்ப்பு அளிக்கும் விதமாக அமெரிக்கா அதனுடன் 160 கிலோமீட்டர் தொலைவு பாயக்கூடிய AIM-120D BVRAAM மற்றும் AIM-9X வானிலக்கு ஏவுகணைகளையும் கூடவே ஆஃபர் செய்துள்ளது.

இது தவிர F/A – 18 போர் விமானத்துடன் இந்திய ஆயுதங்கள் மற்றும் விமான தொழில்நுட்ப அமைப்புகளை இணைக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தவிர இந்திய கடற்படைக்கான 27 பலதிறன் போர் விமானங்களை வாங்குவதற்கான தேர்வில் அனைத்து நிபந்தனைகளையும் F/A-18 போர் விமானம் பூர்த்தி செய்துள்ளதாக இந்திய கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.