அமெரிக்க மற்றும் இந்தோனேசிய ராணுவங்கள் இந்த ஆண்டு தங்களது வருடாந்திர ராணுவ கூட்டு பயிற்சிகளை துவங்கி உள்ளன.
இந்த கூட்டு பயிற்சியில் இந்த முறை அமெரிக்கா இந்தோனேசியா உட்பட ஜப்பான் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுமார் 4000 வீரர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது தைவான் விவகாரம் காரணமாக அந்த பிராந்தியத்தில் பதட்டம் நிலவி வந்தாலும் இது மிகவும் முக்கியமான யாரையும் குறிவைத்து நடத்தபடாத போர் ஒத்திகை என அமெரிக்க தளபதி தெரிவித்தார்.