நூற்றுக்கணக்கான அபாச்சி ஹெலிகாப்டர்களை படைவிலக்கம் செய்யும் அமெரிக்க ராணுவம் !!

  • Tamil Defense
  • August 17, 2022
  • Comments Off on நூற்றுக்கணக்கான அபாச்சி ஹெலிகாப்டர்களை படைவிலக்கம் செய்யும் அமெரிக்க ராணுவம் !!

அமெரிக்க தரைப்படை தன்னிடம் பயன்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான அபாச்சி BOEING AH-64D APACHE ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை படைவிலக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக படைவிலக்கம் நடவடிக்கையில் உதவ தகுதியான நிறுவனங்கள் விண்ணபிக்க அமெரிக்க அரசின் காண்டிராக்டிங் இணையதளத்தில் டென்டர் விடப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு தலா 3 முதல் 7 AH-64D ரக ஹெலிகாப்டர்களை படையில் இருந்து விலக்க வேண்டும் என்பதும் இவற்றில் இருந்து உபயோகப்படுத்த தகுதியான பாகங்களை பிரித்தெடுத்து AH-64E ரக ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது நிபந்தனைகள் ஆகும்.