இந்திய கடற்படையின் P8 விமானத்தை பராமரிக்கும் தமிழக பணிமனை !!

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on இந்திய கடற்படையின் P8 விமானத்தை பராமரிக்கும் தமிழக பணிமனை !!

Airworks எனப்படும் 70 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட இந்திய நிறுவனம் விமான பராமரிப்பு மறுசீரமைப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Boeing Airbus Dassault Embraer உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வானூர்திகளை இந்தியாவிலேயே பராமரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்பு நிறுவனம் என்ற சிறப்பை கொண்டுள்ளது.

மும்பை, கொச்சி, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிமனைகளை இந்த நிறுவனம் கொண்டுள்ளது, இதில் ஒசூர் பணிமனையில் இந்திய கடற்படையின் Boeing P8 ரக விமானங்களை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே ஐந்து விமானங்களின் “Phase 32” சோதனைகள் நடைபெற்ற நிலையில் ஆறாவது விமானத்தின் சோதனைகளும் முடிவுற்று இந்திய கடற்படையிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்திய முப்படைகளின் Maintain In India அதாவது இந்தியாவிலேயே பராமரிப்பு எனும் கொள்கையின் அடிப்படையில் உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பு பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.