வேலூரில் அக்னிபாத் பெண்கள் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் !!

வருகிற நவம்பர் மாதம் 27 முதல் 29 வரையிலான மூன்று நாட்கள் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் பெண்களுக்கான அக்னிவீரர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்திய தரைப்படையின் காவலர் படைப்பரிவிற்கான Corps of Military Police ஆட்சேர்ப்பு முகாம் ஆகும் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

இந்த ஆட்சேர்ப்பு முகாம் பற்றிய கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும் இந்திய தரைப்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.in என்ற.இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய தரைப்படையில் சிப்பாய்கள் அந்தஸ்தில் பெண்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது முதல்முறையாக அக்னிபாத் திட்டத்தின்கீழ் மீண்டும் பெண்கள் இணைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.