விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை பார்வையிட்ட நடிகர் மோகன்லால் !!

  • Tamil Defense
  • August 7, 2022
  • Comments Off on விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை பார்வையிட்ட நடிகர் மோகன்லால் !!

சனிக்கிழமை அன்று பிரபல மலையாள நடிகரான் மோகன்லால் கொச்சியில் இந்திய கடற்படையின் புதிய கப்பலான விக்ராந்தை பார்வையிட்டார்.

பின்னர் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை கட்டிய கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் ஊழியர்களையும், விக்ராந்த் தப்பலை இயக்கும் கடற்படை வீரர்களையும் சந்தித்து பேசினார்.

பின்னர் சமுக வலைதளத்தில் இந்திய கடற்படையின் விக்ராந்த் கப்பலை பார்வையிட்டதில் பெருமகிழ்ச்சி எனவும், இந்திய கடற்படைக்கு வலுசேர்ப்பது மட்டுமின்றி இந்தியாவின் கப்பல் கட்டுமான திறமைக்கு சான்று எனவும் பதிவிட்டார்.

நடிகர் மோகன்லால் உடன் ஒய்வு பெற்ற தரைப்படை அதிகாரியான மேஜர் ரவி அவர்களும் உடனிருந்தார் இவர் நடிகர் மற்றும் இயக்குனர் என்பதும் அரண் படம் இவர் இயக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மோகன்லால் இந்திய பிராந்திய தரைப்படையில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் கவுரவ அதிகாரி லெஃப்டினன்ட் கர்னல் அந்தஸ்தில் உள்ளவர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.