மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் The Lady Han எனும் பெயர் கொண்ட இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட Yacht எனும் வகை படகு கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
முதலில் இந்த படகு கரையில் இருந்து சுமார் 2 முதல் 3 கிலோமீட்டர் தொலைவில் தென்பட்டதாகவும் பின்னர் கரை ஒதுங்கிய நிலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து சோதனை செய்த போது ஒரு கருப்பு பெட்டிக்குள் மூன்று ஏகே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட இந்த படகின் உரிமையாளர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹன்னா லோர்டோகன் எனும் பெண்மணிக்கு சொந்தமானது மேலும் இந்த படகில் இருந்த உயிர் காக்கும் படகானது மும்பை அருகே கரை ஒதுங்கி உள்ளது.
இந்த படகு ஒமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஐரோப்பா நோக்கி புறப்பட்டு உள்ளது இதன் கேப்டன் மேற்குறிப்பிட்ட பெண்மணியின் கணவர் ஜேம்ஸ் ஹோபர்ட் ஆகும் ஜூன் 26 படகின் என்ஜின்கள் பழுதடைய உடனடியாக உதவி கோரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து படகில் இருந்த மூன்று மாலுமிகள் மற்றும் ஐந்து பயணிகளை தென்கொரிய கடற்படையின் போர் கப்பல் ஒன்று மீட்டுள்ளது அதன் பிறகு படகு தனியாக விடப்பட்டதா அதனை யாரேனும் கைபற்றி தவறான காரியங்களுக்கு உபயோகப்படுத்தினார்களா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதனை தொடர்ந்து மஹாராஷ்டிரா காவல்துறை உஷார்படுத்தப்பட்டு உள்ளது மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.