இந்திய தரைப்படைக்கு 95 சுதேசி இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் !!

  • Tamil Defense
  • August 3, 2022
  • Comments Off on இந்திய தரைப்படைக்கு 95 சுதேசி இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் !!

இந்திய தரைப்படைக்கு உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட சுமார் 95 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்திய தரைப்படைக்கு 5 ஹெலிகாப்டர்கள் முதல்கட்டமாக தயாரிக்கப்பட்டு வருவதும், இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய தரைப்படை செயல்பாட்டுக்கு கொண்டு முதலாவது LCH படையணியை சீன எல்லையோரம் நகரத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே போல் இந்திய தரைப்படை தலா 10 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வீதம் 7 படையணிகளை உருவாக்கி மலையக பகுதிகளில் நிலைநிறுத்தவும் திட்டமிட்டு உள்ளது.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனா உடனான எல்லை பிரச்சினையின் போது இந்த ஹெலிகாப்டர்களில் இரண்டு எல்லையோரம் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.