அக்னிபாத் திட்டத்தில் இந்திய கடற்படைக்கு 9.55 லட்சம் விண்ணப்பங்கள் !!

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on அக்னிபாத் திட்டத்தில் இந்திய கடற்படைக்கு 9.55 லட்சம் விண்ணப்பங்கள் !!

இந்திய கடற்படையில் அக்னிவீரராக அக்னிபாத் திட்டத்தில் இணைவதற்கு 82,200 பெண்கள் உட்பட சுமார் 9.55 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் இந்த திட்டத்தின் கீழ் படையில் இணைய விண்ணப்பித்த நிலையில் விண்ணப்பித்தலுக்கான காலம் தற்போது முடிவடைந்துள்ளது.

இந்திய தரைப்படைக்கு பிறகு இந்திய கடற்படை அதிகாரிகள் அல்லாமல் வீரர்கள் அந்தஸ்தில் பெண்கள் இணைய இந்த திட்டத்தின் மூலம் வாய்ப்பு வழங்கியுள்ளது முதலாவது தொகுதி வீராங்கனைகள் நவம்பர்21 அன்று சில்கா கடற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி துவங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கடற்படையில் இருந்து வெளிவரும் அக்னிவீரர்களுக்கு துணை ராணுவம் காவல்துறை அரசுத்துறைகள் மற்றும் கப்பல் நிறுவனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.