இஸ்ரேல் மீது ஏவப்பட்ட 350க்கும் அதிகமான ராக்கெட்டுகள் !!

காசா பகுதியில் இருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது சுமார் 350க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் அஷ்கலோன், அஷ்தோத், டெல் அவிவ், எஸ்தரோத், யாவ்னெ,ரிஷென் லெஸியோன், ஹோலோன்,பாட் யாம் போன்ற நகரங்களை நோக்கி இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

வெள்ளிக்கிழமை துவங்கிய இந்த ராக்கெட் தாக்குதல் சனிக்கிழமை முழுவதும் தொடர்ந்தது, ஏவப்பட்ட 350 ராக்கெட்டுகளில் 227 இஸ்ரேலிய வான்பகுதிக்குள் நுழைந்தன.

அவற்றில் 162 ராக்கெட்டுகளை Iron Dome அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்தது, 29 கடலில் விழுந்தன, 94 காசாவிலேயே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஷ்தரோத் நகரில் ஒரு வீட்டில் ராக்கெட் விழுந்தது ஆனாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அஷ்கலோன் நகரில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.