தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு 3 கமாண்டோக்கள் பணிநீக்கம் !!

  • Tamil Defense
  • August 18, 2022
  • Comments Off on தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு 3 கமாண்டோக்கள் பணிநீக்கம் !!

இந்த வருடம் துவக்கத்தில் ஃபெப்ரவரி 16ஆம் தேதி தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பெங்களூரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காரில் அத்துமீறி நுழைய முயன்றார்.

அவரை பின்னர் பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து தில்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர் இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை உத்தரவிட்டது தற்போது விசாரணை முடிவுற்று ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அஜித் தோவல் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் SSG – Special Security Group சிறப்பு பாதுகாப்பு குழுவை சேர்ந்த மூன்று கமாண்டோ வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர், மேலும் இந்த படையின் தலைமை அதிகாரியான DIG அந்தஸ்து அதிகாரி ஒருவர் மற்றும் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள கமாண்டன்ட் அந்தஸ்து அதிகாரி ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்திய அரசின் VIP பட்டியலில் உள்ளவர் ஆவார் இருக்கு Z plus அந்தஸ்திலான பாதுகாப்பு வழங்கப்படுகிறது, இவருக்கான பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படையின் விஐபி பாதுகாப்பு பிரிவான SSG படை வழங்குவது குறிப்பிடத்தக்கது.