27 சீன போர் விமானங்கள் ஊடுருவியதாக தைவான் குற்றச்சாட்டு !!

  • Tamil Defense
  • August 4, 2022
  • Comments Off on 27 சீன போர் விமானங்கள் ஊடுருவியதாக தைவான் குற்றச்சாட்டு !!

சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி தைவான் சென்றதற்கு பிறகு சுமார் 27 சீன போர் விமானங்கள் தைவானுடைய வான் பாதுகாப்பு பகுதிக்குள் ஊடுருவியதாக குற்றம்சாட்டி உள்ளது.

தைவானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 6 J-11 போர் விமானங்கள், 5 J-16 பலதிறன் போர் விமானங்கள், 16 Su-30 கனரக பலதிறன் போர் விமானங்கள் ஆகியவை அத்துமீறி நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளது.

அதே போல திங்கட்கிழமை அன்று சுமார் 21 சீன போர் விமானங்கள் தைவானுடைய தெற்கு பகுதியில் உள்ள ADIZ – Air Defence Identification Zone வான் பாதுகாப்பு அடையாள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.