Day: August 26, 2022

சீன ஆளில்லா விமானத்தை கல் எறிந்து தாக்கிய தைவான் வீரர்கள் !!

August 26, 2022

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தைவான் நாட்டு ராணுவத்துடைய லெயூ பட்டாலியன் இருக்கும் முகாம் மீது ஒரு ஆளில்லா விமானம் மாலை 6 மணியளவில் பறக்க துவங்கி அந்த பகுதியில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆளில்லா விமானத்தை கண்ட தைவானிய வீரர்கள் இருவர் ஆளில்லா விமானத்தை நோக்கி ரேடியோ மூலமாக எச்சரிக்கை செய்திகளை அனுப்பினர் அவர்களில் ஒருவர் விமானத்தை புகைப்படம் எடுக்க தனது கேமிரா மூலமாக முயற்சி செய்துள்ளார். இவையனைத்தும் அந்த ஆளில்லா விமானம் எடுத்த […]

Read More

ரஷ்யாவை எதிர்த்து முதல்முறையாக ஐ.நா வில் வாக்களித்த இந்தியா !!

August 26, 2022

உக்ரைன் தொடர்பான விவகாணத்தில் கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடைபெற்ற செயல்முறை வாக்கெடுப்பில் ரஷ்யாவை எதிர்த்து இந்தியா முதல்முறையாக வாக்களித்து உள்ளது. கடந்த புதன்கிழமை உக்ரைன் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு உக்ரைன் போர் துவங்கி ஆறு மாதங்கள் ஆன நிலையில் அதனை குறித்த நிலவரத்தை ஆய்வு செய்யும் வகையில் 15 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூடியது. அப்போது உக்ரைன் அதிபர் வேலோடிமிர் செலன்ஸ்கியை இந்த கூட்டத்தில் […]

Read More

300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்டெல்த் போர் விமானங்களை கூட கண்டறியும் சீனாவின் புதிய ரேடார் !!

August 26, 2022

சீனாவின் சிச்சவான் ஜியோஷ எலெக்ட்ரிக் குழுமத்தின் பொறியாளர்கள் ஒரு சிறிய அதிநவீன அகச்சிவப்பு தேடல் மற்றும் கண்டறிதல் அமைப்பை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அகச்சிவப்பு தேடல் மற்றும் கண்டறிதல் அமைப்பை கொண்டு 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வழக்கமான விமானங்களையும், 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்டெல்த் போர் விமானங்களையும் அடையாளம் காணமுடியும் என கூறப்படுகிறது. இது தவிர இந்த அகச்சிவப்பு தேடல் மற்றும் கண்டறிதல் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள லேசர் அமைப்பு மூலமாக […]

Read More

சீன எல்லையோரம் இந்திய அமெரிக்க கூட்டுபயிற்சி கடும் கோபத்தில் சீனா அறிக்கை !!

August 26, 2022

ஹிமாச்சல பிரதேச மாநிலம் பாக்லோவில் உள்ள இந்திய தரைப்படையின் சிறப்பு படைகள் பயிற்சி பள்ளியில் வஜ்ரா பிரஹார் என்ற பெயரிலான 21 நாட்கள் கூட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க தரைப்படையின் 1st SFG Special Forces Group 1ஆவது சிறப்பு படைகள் குழு மற்றும் இந்திய தரைப்படை சார்பில் SFTS சிறப்பு படைகள் பயிற்சி பள்ளியின் சிறப்பு படை வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இங்கிருந்து சீன எல்லை வெறுமனே நூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, […]

Read More

அக்னிபாத் திட்டத்தின் கீழ் கோர்க்கா வீரர்கள் நேபாளத்தில் இருந்து சேர்க்கப்படுவர் இந்திய அரசு !!

August 26, 2022

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சி காலம் முதல் இன்று வரை நேபாளத்தில் இருந்து கோர்க்கா வீரர்களை தனது தரைப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம்களை நடத்தி தேர்வு செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் முன்னர் நேபாளத்தில் இருந்து கோர்க்கா வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது போல இனியும் ஆட்சேர்ப்பு நடைபெறுமா என்பது பற்றிய கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் சமீபத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற வாராந்திர ஊடக சந்திப்பில் பேசிய வெளியுறவு […]

Read More

இந்திய தரைப்படைக்கு புதிய தொலைதூர தாக்குதல் ராக்கெட் தயாரிக்க திட்டம் !!

August 26, 2022

இந்திய தரைப்படை ஏற்கனவே பினாகா மார்க்-1 மற்றும் பினாகா மார்க்-2 PINAKA MK1 , PINAKA MK2 எனும் இரண்டு வகையான ராக்கெட் அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது, இவை முறையே 37-45 கிலோமீட்டர் மற்றும் 60-90 கிலோமீட்டர் தூரம் வரையும் பாயக்கூடியவை ஆகும். இந்த நிலையில் சீனா தற்போது தனது படைகளில் இணைத்துள்ள AR-3 மற்றும் PHL-03 ஆகிய பல குழல் ராக்கெட் அமைப்புகள் முறையே 100-220கிலோமீட்டர் மற்றும் 70-130 கிலோமீட்டர் தொலைவு பாயக்கூடியவை ஆகும். மேலும் […]

Read More

மீண்டும் தைவான் அருகே போர் பயிற்சிகளை அறிவித்த சீனா !!

August 26, 2022

சீனா இன்றும் நாளையும் அதாவது ஆகஸ்ட் 26,27 ஆகிய நாட்களில் தைவான் ஜலசந்தியில் மீண்டும் போர் பயிற்சிகளை அறிவித்துள்ளது. இந்த போர் பயிற்சிகள் சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்தின் கடலோர பகுதிகளில் அமைந்துள்ள ஃபியூகியாங் மற்றும் பூடிங் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளன. இந்த பயிற்சிகளின் போது உண்மையான ஆயுதங்களை சீன படைகள் பயன்படுத்தும் எனவும் ஆகவே போர் பயிற்சிகள் நடைபெறும் இடத்தில் கப்பல்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் […]

Read More