Day: August 14, 2022

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் எச்சரித்த உளவுத்துறை !!

August 14, 2022

நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் நாடெங்கும் பாதுகாப்பை அதிகரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது காரணம் பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் உடைய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது தற்போது அந்த அமைப்புகளை இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் தாக்குதல்களை நடத்துமாறு ஐ.எஸ்.ஐ அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடனும் […]

Read More

ரஜோரி ராணுவ முகாமில் தாக்குதல் பொறுப்பேற்ற கையோடு காஷ்மீரில் நடைபெறும் G20 மாநாட்டை தாக்க எச்சரிக்கை !!

August 14, 2022

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற காஷ்மீர் பயங்கரவாத அமைப்பான PAFF – People’s Anti Fascist Front சமீபத்தில் ரஜோரி ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலுக்கு பொறுப்பேற்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI உதவியுடன் வெளியிடப்பட்ட இந்த காணொளியில் ரஜோரி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற கையோடு இந்த ஆண்டு இறுதியில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள G20 மாநாட்டை நடத்த விட மாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது அந்த அமைப்பு. ரஜோரி ராணுவ முகாம் […]

Read More

ஏவுகணை தயாரிப்பை இரட்டிபாக்க முடிவு செய்துள்ள தைவான் !!

August 14, 2022

தைவான் தேசிய சுங் ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம் Taiwan National Chung Shan Institute of Science & Technology அந்நாட்டின் மிகப்பெரிய ஏவுகணை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், இது அரசுத்துறை நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆறு வெவ்வேறு வகையான 200 ஏவுகணைகளை தயாரித்து வரும் நிலையில் இதனை ஆண்டுக்கு 500 ஆக அதிகரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவ உள்ளது. அந்த வகையில் Sky Sword 2 ஏவுகணையின் […]

Read More

துருக்கியின் ஆளில்லா தாக்குதல் ஹெலிகாப்டர் அறிமுகம் !!

August 14, 2022

துருக்கி ஏரோஸ்பேஸ் தொழிற்சாலை Turkish Aerospace Industries நிறுவனம் முதல் முறையாக உள்நாட்டிலேயே Augusta A129 Mangusta தாக்குதல் ஹெலிகாப்டரை அடிப்படையாக கொண்டு T129 ATAK எனும் தாக்குதல் ஹெலிகாப்டரை தயாரித்தது. இது மிகப்பெரிய அளவில் குறிப்பாக சர்வதேச அளவில் பிரபலம் ஆனது தற்போது துருக்கியை தவிர்த்து ஃபிலிப்பைன்ஸ் விமானப்படை இதனை பயன்படுத்தி வருகிறது பாகிஸ்தான் வாங்க முயன்று தோல்வி அடைந்தது. இப்படியிருக்க தற்போது இந்த T129 ATAK ஹெலிகாப்டரை அடிப்படையாக கொண்ட ஒரு ஆளில்லா தாக்குதல் […]

Read More

ரஷ்யாவை போன்றே சூப்பர் டார்பிடோக்களை உருவாக்க உள்ள சீனா !!

August 14, 2022

சீனா அணுசக்தியில் இயங்கும் Super Torpedo சூப்பர் நீரடிகணைகளை தயாரிக்க உள்ளது அதற்கான வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளது, இவை பல ட்ரோன்களை தாக்குதல் நடத்த ஏவ கூடியவை. இந்த சூப்பர் நீரடிகணைகளை மிகப்பெரிய அளவில் தயாரிக்கவும் அவற்றை நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர் கப்பல்கள் ஆகியவற்றில் இருந்து ஏவி பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் POSEIDON அணுசக்தி அணு ஆயுத தாக்குதல் நீரடிகணையானது அணு ஆயுதத்தை சுமந்து கொண்டு நீர்மூழ்கி கப்பல்கள் கூட […]

Read More

இஸ்ரேலை போன்ற மிகவும் மேம்படுத்தப்பட்ட F35 போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா விருப்பம் !!

August 14, 2022

ஜப்பான் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த சில ராணுவம் சார்ந்த செய்தி வெளியிடும் சில ஊடகங்கள் இந்தியா வெளியே தெரியாமல் அமெரிக்காவுடன் F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட F-35 விமானம் உலகில் உள்ள மற்ற அனைத்து F-35 விமானங்களையும் விட அதிநவீனமானது ஆகும், இது முற்றிலும் வேறுபட்டது. அமெரிக்க தழில்நுட்பங்களை மாற்றி விட்டு இஸ்ரேலிய தொழில்நுட்பங்கள் பலவற்றை உட்புகுத்தி முற்றிலும் வேறுபட்ட மேம்படுத்தப்பட்ட ஒரு […]

Read More

ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை உலகின் அதிநவீன கப்பல்களில் இணைக்கும் அமெரிக்கா !!

August 14, 2022

அமெரிக்க கடற்படையின் கடற்படை கடல் அமைப்புகள் கட்டளையகம் உலகின் அதிநவீன நாசகாரி போர் கப்பல்களான USS ZUMWALT மற்றும் USS MICHAEL MONSOOR ஆகிய இரண்டு கப்பல்களை ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இணைக்க தேர்வு செய்துள்ளது இந்த பணிகளை HII – Huntington Ingalls Industries குழுமத்தின் Ingalls Shipbuilding மேற்கொள்ள உள்ளது. கேப்டன் மாத்தியூ ஷ்க்ரோடர் பேசும்போது USS ZUMWALT கப்பலின் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் குறிப்பாக ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இணைக்கும் பணிகள் அக்டோபர் 2023ஆம் […]

Read More

நேபாளத்திற்கு 15 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவி அளிக்கும் சீனா !!

August 14, 2022

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி நேபாள வெளியுறவு அமைச்சர் நாராயண் கட்கா ஆகியோர் சமீபத்தில் சந்தித்து பேசினர் இதனையடுத்து நேபாளத்திற்கு சுமார் 15 பில்லியன் யுவான் மதிப்பிலான நிதி உதவியை அறிவித்துள்ளது. அதாவது 2022ஆம் ஆண்டிற்கான தேர்வு செய்யப்பட்ட திட்டங்களுக்காக சீனா மேற்குறிப்பிட்ட 15 பில்லியன் சீன யுவான் அளவிலான நிதி உதவியை அறிவித்துள்ளது மேலும் 3 மில்லியன் யுவான் மதிப்பிலான பேரிடர் மீட்பு பொருட்கள் மற்றும் 12 மில்லியன் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் […]

Read More

MQ-9 Predator ட்ரோன்களை அடுத்து MQ-4C Triton ரக ட்ரோன்களில் ஆர்வம் காட்டும் இந்திய கடற்படை !!

August 14, 2022

Financial Express ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்திய கடற்படை அமெரிக்காவின் Northrop Grumman Systems Corp நிறுவனத்துடன் MQ-4C Triton ரக ஆளில்லா விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு MQ-4C TRITON ரக ஆளில்லா விமானத்தின் மதிப்பும் சுமார் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ஏற்கனவே இந்திய கடற்படை 10 MQ-9 Sea Guardian ரக ஆளில்லா விமானங்களை தலா 100 மில்லியன் டாலர் மதிப்பில் வாங்க […]

Read More

மீண்டும் சீன விமானப்படை கடற்படை ஊடுருவல்; உஷார் நிலையில் தைவான் படைகள் !!

August 14, 2022

நேற்று சீன மக்கள் விடுதலை ராணுவ கடற்படையின் 6 போர் கப்பல்கள் மற்றும் சீன மக்கள் விடுதலை ராணுவ விமானப்படைக்கு சொந்தமான 24 போர் விமானங்கள் தைவான் நாட்டின் வான் பாதுகாப்பு அடையாள எல்லைக்குள் ஊடுருவி உள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ கடற்படையின் போர் கப்பல்கள் தைவான் நாட்டின் கடல் எல்லைக்குள் சுமார் 12 நாட்டிகல் மைல் உள்ளே வந்து போர் பயிற்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. […]

Read More