Day: August 10, 2022

இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு கண்காட்சி DEFEXPO தேதி இடம் அறிவிப்பு !!

August 10, 2022

இந்த ஆண்டு 12ஆவது பாதுகாப்பு கண்காட்சி DefExpo நடைபெற உள்ளது, தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அதற்கான இடம் தேதி ஆகியவற்றை பற்றிய அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிக்கையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு கண்காட்சி நடைபெறும் எனவும், இந்த 5 நாட்கள் கண்காட்சியில் பொதுத்துறை தனியார் துறை நிறுவனங்கள் தயாரித்த தரைப்படை விமானப்படை கடற்படை ஆகியவை சாரந்த ஆயுத தளவாடங்கள் […]

Read More

உளவு கப்பல் விவகாரம் இலங்கையை தொந்தரவு செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா அறிவுறுத்தல் !!

August 10, 2022

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவின் Yuan Wang 5 எனும் கண்காணிப்பு மற்றும் உளவு கப்பல் வருவதாக இருந்தது இது இந்தியாவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்திய அரசு இலங்கை அரசுக்கு தொடர்ந்து பல்வேறு வகையான அழுத்தங்களை கொடுத்தது, முதலில் பல்வேறு காரணங்களை கூறி இலங்கை அரசு சமாளிக்க முயன்ற நிலையில் பின்னர் காலவரையின்றி சீன கப்பல் வர அனுமதி அளிக்க மறுத்தது. இந்த நிகழ்வு சீனாவை கடுமையாக கோபப்படுத்தி உள்ளது, அதனை தொடர்ந்து […]

Read More

இலங்கை தலைநகர் நோக்கி செல்லும் சீன தயாரிப்பு பாகிஸ்தான் போர் கப்பல் !!

August 10, 2022

ஏற்கனவே சீனாவின் கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவிருந்த விவகாரம் இந்தியா சீனா இலங்கை இடையே முத்தரப்பு அரசியல் பிரச்சினையை கிளப்பிய நிலையில் தற்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள துறைமுகம் நோக்கி பாகிஸ்தான் கடற்படையின் போர் கப்பல் ஒன்று செல்வதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ய இந்த கப்பல் தற்போது கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்பயை தளத்தை நோக்கி செல்கிறது வழியில் மலேசியாவில் நின்ற அந்த கப்பல் […]

Read More

எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து இலங்கை நோக்கி பயணிக்கும் சீன கப்பல் !!

August 10, 2022

சமீபத்தில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவின் கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 வருவதாக இருந்த நிலையில் இந்தியா இலங்கையிடம் கடுமையான எதிர்ப்பு மற்றும் அழுத்தம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இலங்கை சீன கப்பல் இலங்கை வர காலவரையின்றி அனுமதி அளிக்க மறுத்துவிட்டது இது சீனாவின் கோபத்தை தூண்டி விட்டுள்ளது, இந்தியாவை சீன வெளியுறவு அமைச்சகம் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் இந்தியாவின் எதிர்ப்பு மற்றும் இலங்கை அனுமதி அளிக்காத நிலையையும் மீறி சீன […]

Read More

இந்தியாவில் பயிற்சி பெற்ற ஆஃப்கன் ராணுவத்தினரை வரவேற்ற தாலிபான்கள் !!

August 10, 2022

இந்தியாவில் பயிற்சி பெற்ற ஆஃப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தாய்நாடு திரும்பிய நிலையில் அவர்களை அங்கு தாலிபான்கள் வரவேற்று உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி நிறைவு செய்த 25 இளம் ஆஃப்கன் ராணுவ அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி நாடு திரும்பினர். காபூல் விமான நிலையத்தில் அவர்களை தாலிபான் பிரதிநிதிகள் வரவேற்றனர், மேலும் அவர்களின் உயிர்களுக்கு உறுதி அளித்தும் வேலை வாய்ப்பு […]

Read More

உக்ரைனுக்கு 50 கவச வாகனங்கள் ஏற்றுமதி செய்த துருக்கி !!

August 10, 2022

உக்ரைன் படைகளுக்கு துருக்கி 50 BMC Kirpi கவச வாகனங்களை செய்துள்ளது, இந்த வாகனங்களை தற்போது உக்ரைனிய படைகள் பெற்றுள்ளதாக உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ககோவ்கா படையணி அமைப்பு சமுக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் வெளிநாட்டு நண்பர்கள் நமக்கு உதவுகின்றனர், உலகமே ஒரு மோசமான எதிரி வீழ்த்தப்பட வேண்டும் என விரும்புவதாக அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இத்தகைய 150 BMC kirpi கவச வாகனங்களை இரண்டாவது கட்டமாக பெற உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் ஆனால் […]

Read More

தேஜாஸ் விமானத்தை சோதனை செய்ய வரும் ஆஸ்திரேலிய விமானப்படை குழு !!

August 10, 2022

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முன்னனி பயிற்சி போர் விமானம் (LIFT-Lead In Fighter Trainer) வாங்க RFI எனப்படும் தகவல் அறிவிக்கை கோரிக்கையை ஆஸ்திரேலிய விமானப்படை வெளியிட்டது. ஏற்கனவே படையில் உள்ள 33 BAE Hawk-127 பயிற்சி போர் விமானங்களை 2031 முதல் மாற்றி புதிய பயிற்சி விமானங்களை வாங்க இந்த தகவல் அறிவிக்கை ஆஸ்திரேலிய விமானப்படையால் சர்வதேச அளவில் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து Boeing நிறுவனம் தனது T-7A Redhawk, KAI நிறுவனம் […]

Read More

அருணாச்சல பிரதேசத்தில் அசாம் ரைஃபிள்ஸ் வீரர்கள் மீது மியான்மரில் இருந்து துப்பாக்கி சூடு !!

August 10, 2022

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் திராப் மற்றும் சங்லாங் ஆகிய மாவட்டங்களில் அசாம் ரைஃபிள்ஸ் படை வீரர்கள் மீது மியான்மரில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதாவது மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களில் படை வீரர்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரோந்து சென்ற போது எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பயங்கரவாதிகளின் இந்த துப்பாக்கி சூட்டில் அசாம் ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த ஒரு இடைநிலை அந்தஸ்திலான அதிகாரி JCO- Junior […]

Read More

பனிப்போருக்கு பிறகு ஐரோப்பாவில் முதல்முறையாக ரஷ்ய ராணுவ தளம் ??

August 10, 2022

ஐரோப்பிய நாடான செர்பியாவில் ரஷ்யா ராணுவ தளம் ஒன்றை அமைக்க உள்ளதாக செர்பியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் போட்சன் கராசென்கோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் செர்பியாவில் ரஷ்யா ராணுவ தளம் அமைப்பது என்பது செர்பியாவின் உள்நாட்டு விவகாரம் குறிப்பாக அது ரஷ்யாவின் நலன் சார்ந்தது எனவும் கூறியுள்ளார். செர்பியா ரஷ்யாவின் நட்பு நாடு என்பதும் உக்ரைன் படையெடுப்புக்கு பிறகு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்த நிலையில் செர்பியா தடை விதிக்கவில்லை என்பது […]

Read More

சண்டையை தவிர்க்க இந்தியா சீன விமானப்படைகள் இடையே நேரடி தொலைபேசி இணைப்பு !!

August 10, 2022

கடந்த வாரம் லடாக்கின் சூஷூல் மோல்டோ செக்டாரில் நடைபெற்ற இந்திய சீனா இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தைகளின் போது சீன விமானப்படையின் அத்துமீறல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளை பிரச்சினை இன்றி தீர்க்கும் வகையில் இரண்டு நாட்டு விமானப்படைகளுக்கும் இடையே நேரடி தொலைபேசி இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இனி அடுத்தடுத்து நடக்கவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இருதரப்பு விமானப்படை அதிகாரிகளும் நேரடி தொலைபேசி எப்படி எங்கு அமைப்பது என்பது பற்றி கலந்தாலோசித்து முடிவு செய்வர் […]

Read More