Day: August 7, 2022

விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை பார்வையிட்ட நடிகர் மோகன்லால் !!

August 7, 2022

சனிக்கிழமை அன்று பிரபல மலையாள நடிகரான் மோகன்லால் கொச்சியில் இந்திய கடற்படையின் புதிய கப்பலான விக்ராந்தை பார்வையிட்டார். பின்னர் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை கட்டிய கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் ஊழியர்களையும், விக்ராந்த் தப்பலை இயக்கும் கடற்படை வீரர்களையும் சந்தித்து பேசினார். பின்னர் சமுக வலைதளத்தில் இந்திய கடற்படையின் விக்ராந்த் கப்பலை பார்வையிட்டதில் பெருமகிழ்ச்சி எனவும், இந்திய கடற்படைக்கு வலுசேர்ப்பது மட்டுமின்றி இந்தியாவின் கப்பல் கட்டுமான திறமைக்கு சான்று எனவும் பதிவிட்டார். நடிகர் மோகன்லால் உடன் ஒய்வு […]

Read More

நீர்மூழ்கி டென்டரில் மாற்றம் செய்த இந்திய பாதுகாப்பு அமைச்சகம் !!

August 7, 2022

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களுக்கான டென்டரில் உள்ள விதிமுறைகள் காரணமாக பல நிறுவனங்கள் வெளியேறி ஒப்பந்தம் எவ்வித முன்னேற்றத்தையும் காணாத நிலையில் தற்போது அதில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது சில விதிமுறை மாற்றங்களை செய்வதன் மூலமாக இந்த டென்டரில் முன்னேற்றம் காண முடியும் என கூறப்படுகிறது, அதே நேரத்தில் கப்பல்களின் திறனில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் இருந்து Joint & Severe liability எனும் நிபந்தனை மாற்றியமைக்கப்பட உள்ளது, ஆகவே இனி […]

Read More

தைவானை சுற்றி போர் சீன போர் ஒத்திகை முக்கிய எல்லை அடையாள பகுதியில் அத்துமீறல் !!

August 7, 2022

சீனா ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகைகளை நடத்தி வரும் நிலையில் சீன படைகள் இருநாடுகளுக்கும் இடையேயான முக்கிய எல்லை பகுதியில் அத்துமீறி உள்ளன. தைவானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சீன கடற்படை கப்பல்கள் மற்றும் சீன விமானப்படை விமானங்கள் இரு நாடுகளுக்கும் சரியாக நடுவே உள்ள கோட்டை Median Line தாண்டியதாகவும் இது சீண்டும் செயல் எனவும் கூறியுள்ளது. முன்னர் இந்த கோடு இரு நாடுகளும் மதித்து வந்த […]

Read More

தைவான் அருகே சீன போர் ஒத்திகை; ஜப்பானை நெருங்கிய சீன ட்ரோன்கள் !!

August 7, 2022

தைவானை சுற்றி வளைத்து சீன படைகள் போர் ஒத்திகை நடத்தி வந்த நிலையில் சில சீன ஆளில்லா விமானங்கள் ஜப்பானுக்கு மிகவும் நெருக்கமாக பறந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவானில் இருந்து 721 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜப்பானுடைய ஒகினாவா தீவிற்கு மிகவும் அருகே சீனாவின் ஆளில்லா விமானங்கள் பறந்துள்ளன, இங்கு அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளமான கடெனா விமானப்படை தளம் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பானிய விமானப்படை தன்னுடைய போர் விமானங்களை உடனடியாக அனுப்பியதாக ஜப்பான் பாதுகாப்பு […]

Read More

முதல்முறையாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடற்படை அனைத்து பெண்கள் குழு !!

August 7, 2022

இந்திய கடற்படையின் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து பெண்கள் குழு ஒன்று விமானம் மூலமான ரோந்து நடவடிக்கை ஒன்றில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளனர். இந்திய கடற்படையின் INAS – 314 எனும் வான் படையணியை சேர்ந்த ஐந்து பெண் அதிகாரிகள் குஜராத் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வடக்கு அரபி கடல் பகுதியில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ரோந்து பணியை மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளனர். இந்த நடவடிக்கையின் கட்டளை அதிகாரியாக லெஃப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் ஷர்மா, விமானிகளாக லெஃப்டினன்ட் ஷிவாங்கி மற்றும் […]

Read More

அமெரிக்க சபாநாயகரின் தைவான் விஜயம்; எதிர்ப்பு தெரிவித்த வடகொரியா !!

August 7, 2022

சமீபத்தில் தைவான் நாட்டிற்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி பயணம் மேற்கொண்டதற்கு வடகொரியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. வடகொரிய வெளியுறவு துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவ செயல்பாடுகள் இந்த பிராந்தியத்தில் அமைதியை சீர்கெடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளது என காட்டமாக விமர்சித்து உள்ளது. மேலும் சீனாவின் ஒரே சீனா கொள்கையை வடகொரியா அதரிப்பதாகவும், தைவான் விவகாரத்தில் சீனாவுடன் நிற்பதாகவும் அந்த […]

Read More

அமெரிக்கா உட்பட 6 நாடுகள் தேஜாஸ் போர் விமானத்தில் ஆர்வம் – இந்திய அரசு !!

August 7, 2022

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலின்படி அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் தேஜாஸ் போர் விமானத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஃபிலிப்பைன்ஸ், எகிப்து, இந்தோனேசியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் இலகுரக சுதேசி தேஜாஸ் விமானத்தில் ஆர்வம் காட்டி உள்ளதாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் இந்தியா சொந்மாக ஸ்டெல்த் போர் விமானம் தயாரித்து வருவதாகவும் ஆனால் திட்டத்தின் காலகெடு மற்றும் இதர […]

Read More

தேஜாஸ் போர் விமானத்தை தேர்வு செய்ய உள்ள மலேசியா விரைவில் ஒப்பந்தம் ??

August 7, 2022

இந்திய பாதுகாப்பு துறை இணையமைச்சர் அஜய் பாட் பாராளுமன்றத்தில் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை மலேசிய Shortlist செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு மலேசிய விமானப்படை தேஜாஸ் விமானம் சார்ந்த தகவல்களை பெற RFI அனுப்பியது பின்னர் 2021 ஆம் ஆண்டு விருப்பத்தை முன்மொழிந்து RFP அனுப்பியது, இதற்கு இந்தியாவும் தனது இசைவை தெரிவித்தது. அதனை தொடர்ந்து மலேசிய விமானப்படையின் இலகுரக போர் விமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இரட்டை இருக்கை […]

Read More

எல்லையில் இருந்து 10கிமீ தொலைவு வரை சீன விமானங்கள் பறக்க கூடாது இந்தியா அறிவுறுத்தல் !!

August 7, 2022

இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை கட்டுபாட்டு கோட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவு வரை எந்தவொரு ராணுவ விமானங்களும் பறக்க கூடாது என சீனாவுக்கு இந்தியா அறிவுறுத்தி உள்ளது. இதனை கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று சூஷூல் மோல்டோ பகுதியில் நடைபெற்ற இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தையின் போது இந்திய தரப்பு சீன தரப்பிடம் தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ராணுவ கமாண்டர்கள் குழுவில் இந்திய விமானப்படையின் ஏர் கமோடர் […]

Read More

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் முக்கிய பயங்கரவாத தலைவர் மரணம் !!

August 7, 2022

சமீபத்தில் மேற்கு கரை பகுதியில் செயல்பட்டு வந்த மூத்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான பஸ்ஸேம் சாதியை இஸ்ரேல் கைது செய்தது. இதனை தொடர்ந்து காசாவில் இருந்து இயங்கி வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு தொடர் எச்சரிக்கைகளை விடுத்தால் பதட்டம் நிலவி வந்தது. இந்த நிலையில் இஸ்ரேலிய ராணுவம் முன்னெச்சரிக்கை அடிப்படையில் காசா பகுதியில் விமானப்படையை அனுப்பி பலத்த தாக்குதல் நடத்தியது. ஆறு இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை அதிரடியாக நடத்திய தாக்குதலில் தெய்சீர் ஜபாரி என்ற மூத்த […]

Read More