Breaking News

Day: August 4, 2022

பிரம்மாஸ் ஏவுகணையில் ஆர்வம் காட்டும் மியான்மர் !!

August 4, 2022

கடந்த 2ஆம் தேதி TASS ஊடகம் வெளியிட்ட செய்தியில் மியான்மர் இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் Brahmos க்ரூஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய அரசிடம் இருந்து கடன் பெற்று அந்த பணத்தை கொண்டே இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான Brahmos ஏவுகணைகளை தனது கடற்படைக்கு வாங்க மியான்மர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மியான்மர் கடற்படையிடம் ஐந்து வகையான கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன அவற்றில் நான்கு சீன தயாரிப்பு […]

Read More

நிலத்தடி Underground போர் விமான தளங்களின் படங்களை வெளியிட்ட தைவான் !!

August 4, 2022

தைவானிய விமானப்படை மிகவும் அரிதாக தனது நிலத்தடி underground போர் விமான தளத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த விமான தளத்தில் தைவானிய விமானப்படையில் உள்ள அதிநவீன போர் விமானங்களான F-16 போர் விமானங்கள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது சியாஷான் விமானப்படை தளம் எனவும் இங்கு நிலத்தடி போர் விமான தளங்கள் உள்ளன எனவும் இங்கு 5ஆவது படையணி வீரர்கள் விமானங்களில் குண்டுகளை ஏற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். சீன படையெடுப்பை முறியடிக்கும் வகையிலான போர் ஒத்திகையான Han Kuang […]

Read More

ஆஸ்திரேலியாவில் பன்னாட்டு விமானப்படை கூட்டு பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்திய விமானப்படை !!

August 4, 2022

ஆஸ்திரேலியாவில் விரைவில் நடைபெற உள்ள PITCH BLACK பன்னாட்டு விமானப்படை கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையும் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆஸ்திரேலிய விமானப்படை நடத்தும் இந்த பன்னாட்டு போர் பயிற்சியில் QUAD நாடுகள் உட்பட 17 நாடுகள் கலந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா,ஜப்பான், தென் கொரியா, கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஃபிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் […]

Read More

இந்திய சீன எல்லையோரம், இந்திய அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி; சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கையா !!

August 4, 2022

லடாக்கில் இன்னும் எல்லை பிரச்சினை தீராத நிலையில் இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை கட்டுபாட்டு கோடு அருகே அமெரிக்கா மற்றும் இந்திய ராணுவங்கள் இணைந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளன. தற்போது தைவானில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி சென்று சீனாவை கடுப்பேற்றிய நிலையில் தற்போது இந்தியா உடனான இந்த ராணுவ பயிற்சிகளும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பதாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் Yudh Abhyas யுத் அப்யாஸ் என்ற பெயரில் நடைபெறும் இருதரப்பு ராணுவ பயிற்சிகள் […]

Read More

அமெரிக்க இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணுசக்தி நீர்மூழ்கி ஒப்பந்தத்தை எதிர்க்கும் இந்தோனேசியா !!

August 4, 2022

அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து AUKUS என்ற முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் மூலமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளும் ஆஸ்திரேலிய கடற்படைக்கு அணுசக்தியில் இயங்கும் 8 தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான தொழில்நுட்ப உதவிகளை செய்யும். தற்போது இந்த முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு இந்தோனேசியா மிகவும் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது அதாவது இந்த ஒப்பந்தம் பேரழிவு ஆயுதங்கள் பெருக்கத்திற்கு வித்திடும் என கூறியுள்ளது. […]

Read More

நடுத்தர நீர்மூழ்கிகளுக்கான பணிகளை துவங்கியது இந்தியா !!

August 4, 2022

மும்பையின் (Mazagon Docks Limited – MDL) மஸகான கப்பல் கட்டுமான தளம் நடுத்தர நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான பணிகளை துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது நடுத்தர ரக டீசல் எலெக்ட்ரிக் ரக நீர்மூழ்கி கப்பலுக்கான வடிவமைப்பு முடிவுற்று தற்போது Protoype சோதனை வடிவத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பித்து உள்ளன. இந்த நடுத்தர நீர்மூழ்கி கப்பல்களின் எடை நீளம் அகலம் உள்ளிட்ட அளவீடுகள் மற்றும் பிற திறன்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் மஸகான் கப்பல் […]

Read More

பிரம்மாஸ்-2ல் ரஷ்ய ஸிர்கான் ஏவுகணையின் பாகங்கள் !!!

August 4, 2022

TASS ஊடகம் வெளியிட்டுள்ள செய்திகட்டுரையில் இந்தியாவின் பிரம்மாஸ்-2 BRAHMOS-2 அதாவது ஹைப்பர்சானிக் வடிவத்தில் ரஷ்யாவின் ஸிர்கான் ஹைப்பர்சானிக் ஏவுகணை பாகங்கள் இணைக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ரஷ்யாவின் மெஷினோஸ்ட்ரோனியா NPO Mashinostroeniya மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO ஆகியவற்றால் இணைந்து தயாரிக்கப்பட்டு வருகிறது, ஆகவே Brahmos-2 ரஷ்யா Tsirkon ஏவுகணைக்கு ஒத்த செயல்திறனை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதே போல் Brahmos Aerospace Limited நிறுவனத்தின் தலைவர் அதூல் ராணே […]

Read More

27 சீன போர் விமானங்கள் ஊடுருவியதாக தைவான் குற்றச்சாட்டு !!

August 4, 2022

சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி தைவான் சென்றதற்கு பிறகு சுமார் 27 சீன போர் விமானங்கள் தைவானுடைய வான் பாதுகாப்பு பகுதிக்குள் ஊடுருவியதாக குற்றம்சாட்டி உள்ளது. தைவானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 6 J-11 போர் விமானங்கள், 5 J-16 பலதிறன் போர் விமானங்கள், 16 Su-30 கனரக பலதிறன் போர் விமானங்கள் ஆகியவை அத்துமீறி நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளது. அதே போல திங்கட்கிழமை அன்று சுமார் 21 சீன போர் விமானங்கள் தைவானுடைய தெற்கு […]

Read More

தைவான் விவகாரத்தில் இந்தியா ஆதரவு தரும் என நம்புவதாக சீன தூதர் அறிக்கை !!

August 4, 2022

தைவான் விவகாரத்தால் சீனா அமெரிக்கா இடையே மேலும் விரிசல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் சுன் வெய்டாங் தைவான் விவகாரத்தில் இந்தியா ஆதரவளிக்கும் என நம்புவதாக கூறியுள்ளார். அவர் பேசும்போது ஒரே சீனா கொள்கை சீனாவின் வெளிநாட்டு கொள்கையின் அடித்தளம் எனவும் இந்தியா சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிபடுத்த ஆதரவளிக்கும் என நம்புவதாக கூறியுள்ளார். ஒரே சீனா கொள்கையை முதன்முதலாக அங்கீகரித்த நாடு இந்தியா ஆகும் அந்த அடிப்படையில் பிரிவினைவாத தைவானுடயை கொள்கைகளையும் […]

Read More

கிழக்கு தைவானுக்கு மிக அருகே ஏவப்பட்ட சீன டாங் ஃபெங் Dong Feng ஏவுகணைகள் !!

August 4, 2022

சீனா இன்று தைவான் நாட்டின் கிழக்கு பகுதிக்கு மிகவும் அருகே ஐந்து நாள் ராணுவ ஒத்திகையின் ஒருபகுதியாக ஏவுகணைகளை ஏவியதாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் கிழக்கு கட்டளையகத்தின் செய்தி தொடர்பாளர் ஷீ யீ பேசும்போது ஏவுகணைகளை ஏவயிது மட்டுமின்றி வான் பாதுகாப்பு மற்றும் துல்லிய தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். நிபுணர்கள் கூறும்போது Dong Feng 15B ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் எனவும், தைவானுக்கு மிகவும் அருகே […]

Read More