பயங்கரவாதிகளை பிடித்து ஒப்படைத்த காஷ்மீர் கிராமத்தினர்

  • Tamil Defense
  • July 3, 2022
  • Comments Off on பயங்கரவாதிகளை பிடித்து ஒப்படைத்த காஷ்மீர் கிராமத்தினர்

காஷ்மீரீல் உள்ள ஒரு கிராமத்தினர் பயங்கரவாதிகளை பிடித்த சம்பவம் தற்போது நடந்துள்ளது.இரு பயங்கரவாதிகளையும் கிராம மக்கள் பிடித்து பாதுகாப்பு படைகள் வசம் ஒப்படைத்துள்ளனர்.

ரியாசி எனும் மாவட்டத்தில் உள்ள துக்சான் எனும் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.இரு பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

பயங்கரவாதிகளை கிராமத்தினர் பிடித்து பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள்,7 கிரேனேடுகள் மற்றும் பிஸ்டல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தினருக்கு இரு லட்சம் பரிசு தொதை வழங்க உள்ளதாக டிஜிபி அறிவித்துள்ளார்.பைசல் அகமது மற்றும் தலிப் ஹீசைன் என்ற இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.