முக்கிச் செய்தி : படையில் இணைய உள்ள விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல்

  • Tamil Defense
  • July 5, 2022
  • Comments Off on முக்கிச் செய்தி : படையில் இணைய உள்ள விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல்

இந்தியா முதல் முறையாக உள்நாட்டிலேயே கட்டியுள்ள விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் அடுத்த மாதம் படையில் இணைய உள்ளது.படையில் இணைய உள்ள தருவாயில் அடுத்த வாரம் தனது கடைசி கட்ட கடற்சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

இரு வாரத்தில் இந்த சோதனைகள் முடிவுறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.23000 கோடிகள் செலவில் இந்த கப்பல் இந்த கட்டப்பட்டுள்ளது.கடற்சோதனைகள் அனைத்தும் முடியும் பட்சத்தில் அடுத்த மாதம் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இந்த கப்பல் படையில் இணையும்.

40000 டன்கள் எடையுடையது இந்த விக்ராந்த் போர்க்கப்பல்.படையில் இணையும் பட்சத்தில் இந்திய கடற்படைக்கு பலமடங்கு சக்தி தரும்.சீனா தற்போது இரு போர்க்கப்பல்களை இயக்கி வருகிறது.இந்தியா விக்ரமாதித்யா என்ற ஒரு விமானம் தாங்கி கப்பலை மட்டுமே இயக்கி வருகிறது.