நான்காம் கட்ட சோதனைகளை முடித்த விக்ராந்த்- எப்போது படையில் இணையும் ?

  • Tamil Defense
  • July 11, 2022
  • Comments Off on நான்காம் கட்ட சோதனைகளை முடித்த விக்ராந்த்- எப்போது படையில் இணையும் ?

இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் தனது நான்காம் கட்ட கடற்சோதனைகளை முடித்துள்ளது.இந்த சோதனையில் கப்பலின் பெரும்பாலான முக்கிய அமைப்புகள் மற்றும் ஏவியேசன் அமைப்புகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன.

இந்த மாத இறுதியில் விக்ராந்த் கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு அடுத்த மாதம் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.இந்த கப்பல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு இந்தியாவால் கட்டப்பட்டுள்ளது.

2021 ஆகஸ்டில் இந்த கப்பலின் முதல் சோதனையும், அக்டோபர் 2021ல் இரண்டாம் கட்ட சோதனையும்,ஜனவரி 2022ல் மூன்றாம் கட்ட சோதனையும் முடிவு பெற்றது.