இந்திய விமானப்படைக்கான C295 விமானம் – முக்கியத் தகவல்கள்

  • Tamil Defense
  • July 5, 2022
  • Comments Off on இந்திய விமானப்படைக்கான C295 விமானம் – முக்கியத் தகவல்கள்

இந்தியா தனது விமானப்படைக்காக C-295 விமானங்களை வாங்க உள்ளது.இந்த திட்டமானது திட்டமிட்டபடி நடந்து வருகிறது.இந்த விமானத்தில் 13200 பாகங்கள் ,4600 துணை பாகங்கள் மற்றும் ஏழு பெரிய முக்கிய பாகங்கள் உள்ளன.

இவை வெளிப்புற இறக்கை, நடு இறக்கை, box, nose fuselage, center fuselage, appendages மற்றும் கதவுகள் ஆகும்.இந்த முக்கிய பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.இவை தவிர மேலதிக பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விமானத்தில் பொருத்தப்பட உள்ளன.

மேலும் இந்த சி-295 விமானங்கள் தயாரிப்பில் 125 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.மொத்தமாக கூற வேண்டுமென்றால் இந்த விமானம் பெரும்பாலான இந்திய தயாரிப்பு பொருள்களை கொண்டிருக்கும்.